ஆரம்பக்கல்வியையோ வேறு பாடங்களையோ முதல் நியமனம் பெற்று வேறுபாடங்களைத் தொடர்ச்சியாகக் கற்பித்துவரும் ஆசிரியர்களுக்குப் பொருத்தமான தீர்வைப் பெற்றுக் கொடுத்தல்.
மேற்படி ஆரம்பக் கல்வியையோ, வேறுபாடங்களையோ முதல் நியமனம் பெற்று வேறுபாடங்களைத் தொடர்ச்சியாக பலவருடங்கள் கற்பித்து அப்பாடங்களில் சிறந்த தேர்ற்சியைப் பெற்று நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்துசாதனை படைத்துவரும் நல்லனுபவமுள்ள ஆசிரியர்களை மீண்டும் முதல் நியமனம் கெற்ற பாடத்தினைகற்பிக்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வித்திணைக்கம் பணித்திருப்பதையிட்டு பல ஆசிரியர்கள் தேசிய கல்விச் சவைகள் சங்கத்திடம் முறையிட்டுள்ளனர். அதனடிப்படையில் அவர்களுக்கு உதவி செய்ய சங்கம் முடிவு செய்துள்ளதாக தேசிய கல்விச் சவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாள த.திருநாவுக்கரசு ஞாயிற்றுக் கிழமை (10) தெரிவித்தார்.
எனவே இவ்விடையத்தில் பாதிப்படைந்த, பாதிப்படையவிருக்கும்,ஆசிரியர்கள் உடனடியாக பொதுச் செயலாளர் பிறேமஸ்ரீ ரட்னாயக்க 0717224548, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருநாவுக்கரசு 0712158255 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன், தொடர்பு கொள்ளுமாறு தேசிய கல்விச் சவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாள த.திருநாவுக்கரசு மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment