21 Sept 2017

தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு ஓடுவதற்கான காலணி வழங்கிவைப்பு.

SHARE
(அகமட் எஸ். முகைடீன்)

43வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களான எம்.வை.எம். றகீப், .ஜி.எம். மசூத், எம்..எம்.எப். ஹிஜாஸ், எம்.யு.. சம்லி ஆகியோருக்கு ஓடுவதற்கான காலணி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் . பாவாவினால் இன்று (20) புதன்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
மேற்குறித்த வீரர்கள் 43வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் தங்களுக்கு ஓடுவதற்குரிய காலணி இன்மை தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து அவர்களுக்கான காலணிகளை வழங்குமாறு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் தனது இணைப்புச் செயலாளரை பணித்தமைக்கமைவாக மேற்படி காலணிகள் வழங்கிவைக்கப்பட்டன.

43வது தேசிய விளையாட்டுப்போட்டியில் 4400 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் குறித்த வீரர்கள் குழுவாக பங்குபற்றவுள்ளதோடு 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் எம்.வை.எம். றகீப்பும் 4100 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் .ஜி.எம். மசூத்தும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் 4400 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் குறித்த வீரர்கள் குழு முதலாம் இடத்தையும் 4400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் எம்.வை.எம். றகீப் இரண்டாம் இடத்தையும் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: