ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாபுரம் புகையிரத நிலையம் அருகில் புகையிரக் கடவையில் புகையிரதத்துடன் மோதுண்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பயனின்றி புதன்கிழமை 20.09.2017 பிற்பகல் மரணமாகியதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளரான தம்பிராசா சிவநேசன் (வயது 60) என்பவரே மரணித்தவராகும். இவர் கடந்த 10 தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்து இடம்பெற்ற போது இவரே வாகனத்தை செலுத்திச் சென்றிருந்தார். இவருடன் உதவியாளராகச் சென்ற சித்தாண்டியைச் சேர்ந்த எஸ். நிரோஷன் (வயது 18) என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 09.09.2017 அன்று காலை 7.20 மணியளவில் பொலொன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் படி ரக வாகனம் மோதி கோர விபத்து இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவம் இடம்பெறும்போது தேவாபுரம் புகையிரதக் கடவையில் காவலாளிகள் எவரும் கடமையில் இருந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment