20 Sept 2017

அனர்த்த தத்ரூப ஒத்திகை நிகழ்வு

SHARE
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் உள்ளிட்ட அனர்த்த ஒன்று இடம்பெற்றால அதனை வைத்தியசாலை எவ்வாறு முகாமை செய்து கொள்வது என்பது தொடர்பான தவிர்ப்பு தத்ரூப ஒத்திகை முன்னோட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு புதன் கிழமை (20)  இடம்பெற்றது.
களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு முன்னால் கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய விபத்துத் தத்ரூபமான நிகழ்வுகவாக இடம்பெற்றன.

அனத்தம் ஒன்று இடம்பெற்றால் அந்த அனத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமுற்றவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டடோர் வைத்தியசாலையில் எவ்வாறு முகாமை செய்து நடாத்தப்பட வேண்டும் என்ற ஒத்தியையே இதன்போது இடம்பெற்றது.

களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு முன்னால் கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் த்ததூரூபமாக ஏற்படுத்தப்பட்ட விபத்தில் எவ்வாறு காயப்பட்டவர்களை மீட்பது, நோய்காவு வண்டியில் எவ்வாறு கொண்டு செல்வது, வைத்தியசாலையில் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது, பதிவுகளை மேற்கொள்ளவது, உள்ளிட்ட பல விடையங்கள் இதன்போது ஒத்திகை பார்க்கப்பட்டன.

அனர்த்தம்இடம்பெற்ற இடத்தில் இருந்து களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டததையடுத்து உடன் வைத்தியசாலை நிருவாகம் நோயாளர்களைப் பொறுப்பேற்பதற்குத் தயாராகி அனர்த்தம் இடம்பெற்ற இடத்திற்கு 2 நோய்காவு வண்டிகள் ஆனுப்பப்பட்டு நோயாளர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து சிகிச்சையளிக்கப்பட்டனர்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்

வைத்தியசாலையின் அனத்த பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள், களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள்,  என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பார்வையாளர்களுக்கும் விழிப்புணர்வூட்டிய இந்த தத்ரூபமான அனர்த்த ஒத்திகை நிகழ்வு படிப்பினைக்குரியதாக இருந்தமை சிறப்பம்சமாகும்.



































SHARE

Author: verified_user

0 Comments: