28 Sept 2017

போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

SHARE
போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (28) வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் இணைத்த தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கிராம அபிவிருத்தித்திட்டங்கள், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்டங்கள், வீடமைப்பு, திவிநெகும நிகழ்ச்சித்திட்டம், ஏனைய இதன அமைச்சுக்களின் வேலைத்திட்டங்கள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் மின்சார வினியோகம் 100 வீதம் பூர்தி செய்யப்பட்டுள்ளதோடு, சின்னவத்தை – ஆனையட்டியவெளி வீதி, மற்றும் திக்கோடை – செல்வாபுரம் வீதி ஆகியவற்றை சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் புணரமைப்புச் செய்தல், மேச்சல்தரைப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் முகமாக வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளும், கால்நடை பண்ணையாளர்களும், சுமுகமான முறையில் நடந்துகொள்ளுதல், பிரதேச சபையினால் அகற்றப்படும் கழிவுகளை மக்கள்; குடியிருப்புக்களுக்கு அருகாமையில் இடாமல் பொருத்தமான இடம் ஒன்றைத் தெரிவு செய்தல், மண்டூர் - குருமண்வெளி ஓடத்துறையில் சேவையிலீடுபட்டிருந்த பாதை பழுதடைந்துள்ளது அதனை விரைவில் திருத்தி அவ்வோடத்துறையில் மீண்டும் சேவையிலீடுபடுத்துதல், மண்டூரில் பொலிசார் இதுவரை காலமும் தங்கியிருந்த வீடுவளவுகளை உரியமுறையில் பரிசோரனை செய்த பின்னர் விரைவில் அவற்றை அம்மக்களிடம் கையளித்தல், 4 கிலோ மீற்றர் யானை வேலியமைத்தல் உள்ளிட்ட பல விடையங்கள் இதன்போது பேசப்பட்டன.

கிழக்கு மாகாணசபையின் ஆயுட் காலத்தின் கடைசி அமர்வு வியாழக் கிழமை (28) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபைக் கட்டத்தில் நடைபெற்றதனால் இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் சமூகம் கொடுத்திருக்கவில்லை.








SHARE

Author: verified_user

0 Comments: