மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடொன்றை ஏற்பாடு செய்திருப்பதாக ராபிதா அமைப்பு தெரிவித்துள்ளது.வெள்ளிக்கிழமை 22.09.2017 அன்று ஓட்டமாவடி மாஞ்சோலை, ஹிழ்ரிய்யா ஜும்ஆ மஸ்ஜித்தில் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு பொது அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது.
சமகால முஸ்லிம் உலகில் எதிர்நோக்கப்படும் விவகாரங்கள், இஸ்லாமிய கொள்கை விளக்கங்கள், சகவாழ்வும் பண்பாட்டு விழுமியங்களும் உள்ளிட்ட இன்னும் பல சமகால விவகாரங்கள் இந்த எழுச்சி மாநாட்டில் எடுத்தாளப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment