14 Sept 2017

பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” காண்பியக்கலைக் காட்சி

SHARE
“பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் மூன்றாவது காண்பியக்கலைக் காட்சித் தொடர் செப்டெம்பெர் மாதம் 15, 16, மற்றும் 17ஆம் திகதிகளில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள பேர்டினன்ஸ் மண்டபத்தில் காலை 9.30 தொடக்கம் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது விடயமாக ஏற்பாட்டாளர்களும் செயற்பாட்டாளர்களுமான அந்தக் குழு வெளியிட்டுள்ள அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெண்களுக்கும் அனைத்து மனிதர்களுக்கும்; எதிரான வன்முறைகளற்ற வாழ்வு கொண்டாடப்பட வேண்டியது அவசியம். 

பொதுவாக வன்முறைகளை உருவாக்குவதில் ஊடகங்களுக்கும் கலைகளுக்கும் எவ்வளவு பங்கு இருக்கின்றதோ, அதேயளவு பங்கு வன்முறைகளற்ற வாழ்வை உருவாக்குவதிலும் இருக்கின்றது.

அத்தகைய மகிழ்வான வாழ்வை உருவாக்குவதில் ஒரு சிறு பங்கு வகிப்பதற்காக இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் ஒன்றிணைந்து  “வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்”, என்ற குழுவை உருவாக்கியுள்ளனர்.

எனவே, இதனைக் கண்டுணர்ந்து படிப்பினை பெற வாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் ஓவியக்கண்காட்சியில் கமலா வாசுகி, ஆர். நிர்மலவாசன், எஸ்.பி. புஷ்பகாந்தன், ப. நிறஞ்சன், கோ. மதிஸ்குமார், சி. யசோதாரினி, எம்.ரீ.எப். ருக்ஸானா, ரீ.வினோஜா, ஆ. எம். நிருபா, எஸ். தனுசியா, ஏ. லுஜிதன், ஏ. குகதீசன், ஏ. ஜதீஸ்குமார், வை. ஜகேன்   ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெறவுள்ளன.

‪இவர்களது முதலாவது காண்பியக்கலைக் காட்சி “பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் கடந்த பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலும், இரண்டாவது கண்காட்சி மார்ச் மாதம் 26, 27ம் திகதிகளில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: