14 Sept 2017

பழுகாமத்தில் இடம்பெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

SHARE
திருப்பழுகாமம் ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள பால கிருஷ்ணன் சிலை வளாகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றது. பாலகிருஷ்ணருக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன்  ஆலய தொண்டர்களால் பயணிகளுக்கு தாகசாந்தியும் வழங்கப்பட்டது. இப்பூசை நிகழ்வுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். தற்போது இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் இடம்பெற்று மண்டலாபிசேகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற காத்தற் கடவுள் எல்லாம் வல்ல ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆதலால் இன்றைய கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் கிருஷ்ணனை பணிந்து வணங்கி அவனுடைய கிருபையை பெற்று நல்வாழ்வு வாழ நாம் வழி வகுத்துக் கொள்ளுதல் வேண்டும்.








SHARE

Author: verified_user

0 Comments: