ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் சனிக்கிழமை (23) மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்தியின் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வீட்டில் இடம்பெற்றது.
இதன்போது ஐக்கியதேசியக் கட்சியின் செயலாளரும், அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஸிம், ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூரத்;தி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்த்தர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது ஐக்கியதேசியக் கட்சியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் எவ்வாறு இஸ்த்திரப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
0 Comments:
Post a Comment