தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் போரதீவுப்பற்றுப் பிரதேசக் கிளையினால் மட்டக்களப்பு பழுகாமம் துரௌபதையம்மன் ஆலய முன்றில் செவ்வாய் கிழமை (26) மாலை நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாக்கியச் செல்வம் அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா, முன்னாள் நாடாளுமன்ற பொன்.செல்வராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கிருஸ்ணபிள்ளை சேயோன், மற்றும் கட்சியின் மாவட்டத்திலுள்ள ஏனைய தொகுதிகளின் கிளை அங்கத்தவர்கள், பழுகாமம் கிராமபொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது திரௌபதையம்மன் ஆலயத்தில் பூஜைகள் வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் தியாக தீபம் திலீபனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கலந்து கொண்டோரால் 30 சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன.
பின்னர் இதன்போது கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களால் நினைவுரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment