மட்டக்களப்பு, இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் 29ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் மறைந்த கழக உறுப்பினர் புவிராஜா வின் 13ஆவது அண்டை நினைவு கூரும் முகமாகவும் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டியில் கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
26 விளையாட்டுக் கழகங்கள் பங்குகொண்ட இப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு கூழாவடி டிஸ்கோ கழகமும், கொக்குவில் அக்கினி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டது.
முதலில் துடுப்பொடுத்தாடிய டிஸ்கோ அணியினர் 06 விக்கொட் இழப்புக்கு 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து அக்கினி ஸ்டார் அணியினர் 08 விக்கட் இழப்புக்கு 18 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இப் போட்டியில் டிஸ்கோ அணியினர் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவாகியதுடன், அக்கினி ஸ்டார் விளையாட்டுக் கழகம் 2ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இப் போட்டியில் ஆட்ட நாயகனாக டிஸ்கோ அணியைச் சேர்ந்த ரி.மோகனன் தெரிவானார்.
இவ் இறுதிச் சுற்று நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் போன்றோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றோருக்கு வெற்றிக் கிண்ணங்களையும் பணப் பரிசில்களை வழங்கிவைத்தனர்.
0 Comments:
Post a Comment