(எம்.எஸ்.எம்.சறூக்)
நீரின் தரம் இநீர் கட்டணம் மற்றும் வருமானம் பெறப்படாகநீர் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி காத்தான்குடி சுகாதார வைத்தியஅதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமை (15) திகதிகாத்தான்குடி சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலக மநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசியநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி,ஏபிரகாஷ்; தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
இதன்போது தேசியநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலக உத்தியோகத்தர்களால் நீரின் தரம் இநீர் கட்டணம் மற்றும் வருமானம் பெறப்படாதநீர் தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி சுகாதாரவைத்திய அதிகாரி டொக்டர் நஷ்;றுதீன் மற்றும் அங்கு பணியாற்றும் அனைத்து பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment