(ஏ.ஹுஸைன்)
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தாமரைக்கேணி ஏறாவூர் நகர் மற்றும் மீராகேணி போன்ற இடங்களில் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் புதன்கிழமை 30.08.2017 கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த தீடீர் ஒருங்கிணைந்த தேடுதலை மேற்கொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டபோது சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஒதுக்குப்புறக் கிராமங்களிலுள்ள இளைஞர்களையும் சிறுவர்களையும் இலக்கு வைத்து இத்தகைய போதைப் பொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக சமூக நல செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் குற்றவாளிகளாகக் காணப்படுமிடத்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டாலேயே அடுத்தவர்கள் திருந்துவார்கள் என்றும் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment