மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா காவற் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் திங்கட்கிழமை 14.08.2017 காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடமையிலிருந்த வேளையில் காவற் சாவடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் இஹல கொட்டாரமுல்ல, கொஸ்வத்தையைச் சேர்ந்த கமகெதர ஸ்ரீபால (வயது 46) என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விடிந்தபோது கடமைக்காக சென்ற மற்றைய பொலிஸ் உத்தியொகத்தர் இவர் அசைவற்று சரிந்து இருந்ததைக் கண்டுள்ளார். அவரை எழுப்பிய போது மரணமாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
மாரடைப்புக் காரணமாக இறந்திருக்கலாம் எனும் ஊகத்திற்கு மத்தியில் உடற் கூற்றுப் பரிசோதனையும் மேலதிக விசாரணையும் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment