இணையவெளிகளில், சமூக ஊடகங்களில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான பாதயாத்திரை ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடியிலும் சனிக்கிழமை 19.08.2017 இடம்பெற்றது.
ஏறாவூர் நகர பொலிஸ் நிலையம் முன்பாக மணிக்கோபுர சந்தியிலிருந்தும் செங்கலடி-பதுளை வீதிச் சந்தியிலிருந்தும் ஆரம்பமான பாத யாத்திரை செங்கலடி யுனைட்டட் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்ததுடன் இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான பிரச்சாரமும் இடம்பெற்றது.
இணைய வெளி சமூக ஊடகங்களில் இடம்பெறும் அவமதிப்புகளுக்கெதிராகவும் இணையவெளி சமூக ஊடகங்களை ஆக்கபூர்வமான விடயங்களுக்குப் பயன்படுத்தி அதிகபட்ச நன்மையடைய சமூகத்தைத் தயார்படுத்துவதே இந்தப் பாத யாத்திரை விழிப்புணர்வின் நோக்கம் என்று வொய்ஸ் மன்றம் நிறுவனத்தின் பிராந்திய இணைப்பாளர் எஸ்.கே. விஸ்வநாத் தெரிவித்தார்.
வொய்ஸ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த பாத யாத்திரையில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிராகவும் சிறுவர் உரிமைகளுக்காகவும் செயலாற்றுகின்ற சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள், சர்வமதங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
“முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் இணைய வெளிகளில் உலாவருவதையிட்டு அவதானமாக இருப்போம்” “சமூக ஊடகங்கள் மூலம் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவோம்” “சமூக ஊடங்களின் மூலம் மற்றவர்களை மதிப்போம்” அடுத்தவரின் படங்களை அனுமதியல்லாமல் பகிரந்து கொள்ளலாமா” போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை பாத யாத்திரை சென்றோர் ஏந்தியிருந்தனர்.
0 Comments:
Post a Comment