19 Aug 2017

பலாச்சோலை அருள்மிகு ஸ்ரீ கருணைமலைப்பிள்ளையார் ஆலய கும்பாபிசேகம்

SHARE
மட்டக்களப்பு மவட்டத்தின் வெல்லாவெளி பிதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட மண்டூர் காக்காச்சிவட்டை - பலாச்சோலை,  அருள்மிகு கருணைமலைப் பிள்ளையார் ஆலய கும்பாபிசேகம் எதிர்வரும் எதிர்வரும் 27ஆம் தகதி காலை நடைபெறவுள்ளது.

கும்பாபிசேகத்தின் ஆரம்பக்கிரியைகள் 23 ஆம் திகதி ஆரம்பமாகி இரண்டு நாட்கள் நடைபெற்று 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகள் நடைபெற்று 27 ஆம்தகதி சனிக்கிழமை காலை கும்பாபிசேகம் நடைபெறும்.

கும்பாபிசேக உற்சவத்தில் 28 ஆம் திகதிமுதல் மண்டலாபிசேகம் நடைபெற்று செப்ரம்பர் 20ஆம் கதி பாற்குட பவனி நடைபெற்று சங்காபிசேகம் நடைபெற்று வசந்த மண்டப பூசையுடன் நிறைவு பெறும்.

கும்பாபிசேக நாட்களில் தினமும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெறும் என்று பலாச்சோலை,  அருள்மிகு கருணைமலைப் பிள்ளையார் ஆலய நிருhவகத்தினர் தெரிவித்தனர்.

சுயமாக உருவாகிய மூல மூர்த்தியைக் கொண்ட இவ் ஆலயம் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட அருள்மிகு கருணைமலைப் பிள்ளையார் ஆலயம் யுத்தகாலத்தில் 1990 மற்றும் 19901 ஆம் ஆண்டுகளில் இராணுவத்தினரது செல் தாக்குதல் காணரமாக சேதமடைந்தது.

அதன் பின்னர் புனருத்தாரணம் செய்யப்படாமிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இதற்கான புனருத்தாரண வேலைகள் எஸ்.வரதராஜனைத் தலைவராகக் கொண்டு ஆலய நிருவாக சபையினால் ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.

யுத்த காலத்தில் அழிவடைந்த இந்த ஆலயத்தின் புனரமைப்புக்காக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் என்.பத்மநாதனைத் தலைவராகக் கொண்ட புனர்வாழ்வு அதிகார சபை, இந்து சமய அலுவலகள் திணைக்களம், ஆகியவற்றின் நிதியுதவிகளுடன் பொதுமக்கள், நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் உதவிகளுடனும் புனரமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புத் தொகுதியில் போரதீவுப் பற்று பிரதேச செயலகப்பிரிவில், பலாச்சோலை என்னும் அழகிய கிராமத்தில் இயற்கை வனப்புடன் கூடிய வனப்பிரதேசத்தில் மலையில் அமைந்துள்ளது அருள்மிகு கருணைமலைப் பிள்ளையார் ஆலயம். ஆலயத்தைச் சுற்று இடையிடையே வயல் நிலங்களும் மலைக் குன்றுகளும், நீரோடைகளும் சிறிய வனங்களும் அமையப்பெற்று இவ்வாலயம் காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: