முறாவோடை காணி விடயம் சம்பந்தமாக வலயக்கல்வி பணிப்பாளரினை அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துவது சரியா? என வெள்ளிக்கிழமை (25) வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
வலையக்கல்வி பணிப்பாளர் கல்வியுடன் சம்பந்தப்பட்ட நிர்வாகி அவரை இதனுடன் இணைத்துக் கொள்வது பொருத்தமற்ற ஒன்றாகும். முதலாவது இப்பிரச்சினையை தீர்த்துவைக்கும் மானப்பாங்குடன் அனைவரும் இந்த விடயத்தில் செயற்படவேண்டும்.
இதையெல்லாம் ஒரு அதிகாரியுடன் இணைக்ககூடாது இதனை சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து இரண்டு தரப்பாரின் கருத்துக்களை கேட்டு எவரும் பாதிக்காத வண்ணம் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் எவரையும் குற்றம் சாட்டுவது பொருத்தமானதாக தென்படவில்லை இதனை அரசியல்வாதிகளே கையாள வேண்டும். நாங்களே இதில் தலத்தில் நின்று தீர்வினை பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து இதனை அதிகாரிகளை வைத்தோ அல்லது அவர்களை குற்றம் சாட்டுவதுன் மூலம் தீர்வு காணமுடியாது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment