கிழக்கு மாகாண சபையின் 82 வது அமர்வு எதிர்வரும் 29.08.2017 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளதாக மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் பேரவைசெயலாளர் அறிவித்துள்ளார்.
அன்றைய அமர்வின் போது இரண்டு விடயங்கள் முதலமைச்சரால் முன்வைக்கப்படவுள்ளதாக அந்த நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டிற்காக முதலாம் இலக்க குறைநிரப்பு பிரேரணை, அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம் முன்வைத்தல் போன்ற இரண்டு விடயங்களுமே இவ் அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளது.
அமர்வு ஒரு முக்கியமான அமர்வாகும் காரணம் அரசிலமைப்பின் இருபதாவது திருத்தம் சம்பந்தமான வாத பிரதிவாதங்கள், கிழக்கு மாகாண சபையில் இதற்கான அங்கிகாரம் கிடைக்குமா? இல்லையா? என்பது தொடர்பான விடயங்களினால் இவ் அமர்வு முக்கியமானவையாக கொள்ளப்படுகின்றது
0 Comments:
Post a Comment