22 Aug 2017

மட்டு.திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் பாரிய தீ விபத்து.

SHARE
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் செவ்வாய் கிழமை (22) அதிகாலை ஒரு மணியளவில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையமானது சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இதில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் திண்மக்கழிவுகள் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டு வருகின்றன. இதேவேளை இப்பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக இதனை பொருத்தமான இடத்திற்கு மாற்றித் தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை இதனால் இப்பகுதி மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தீ விபத்துச் சம்பந்தமாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வே.தவராஜா கருத்துத் தெரிவிக்கையில் இந்நிலையம் பாதுகாப்புடையதாக காணப்பட்ட போதிலும் இப்பகுதியிலுள்ள சிலரது திட்டமிட்ட நாசகாரச் செயலென்றும் இதனால் ஏற்படும் விளைவை அறியாதவர்களே இதனை செய்துள்ளார் என்றும் தாம் குறைந்த வளத்தைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த பொலிஸார் விமானப்படையினரின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை செவ்வாய்க் கிழமை முற்பகல் வரை இத்தீ தொடர்ந்தும் எரிந்த வருவதால் நகரின் அயலிலுள்ள மக்கள் சுவாச நோய்களை எதிர்கொள்ள நேரிட்டடுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான சூழ்நிலையில் தீயை அணைக்க அதிகளவு நீர் தூர இடங்களிலிருந்து எடுத்துவரப்படுவதனாலும் காற்று வீசுவதனாலும் தீயைக் கட்டுப்படுத்த மேலதிக மனித வலுக்களை பயன்படுத்த வேண்டியுள்ளதாக தீ அணைக்கும் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்தும் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபையினால் திகமும் 70 தொண் திண்மக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன, இவற்றுள் 36 தொண் திண்மக் கழிவுகள் இயற்கை உரம் இயற்கை உரம் தயதரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, ஏனையவை உக்காத கழிவுப் பொருட்களாகும். இந்நலையில் தற்போது தீ ஏற்பட்டுள்ள திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் நில மட்டத்திற்கு மேல் 1500 தொண் திண்மக் கழிவுகளும், நில மட்டத்திற்குக் கீழ் 10000 தொண் திண்மக்கழிவுகளும் சேமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: