கடந்த 1987 மற்றும் 1991 காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 143 இற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஞாபகார்த்தமாக கிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி திங்கட் கிழை (22) புணரமைப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் மகிழடித்தீவு இறால்பண்ணை மற்றும் அச்சூழலை அண்டிய பகுதிகளில் இருந்த பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக கடந்த 2002 ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டு அதில் உயிழந்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்;டிருந்தது. பின்னர் இந்த நினைவுத் தூபி கடந்த 2007 ஆம் ஆண்டு சிதக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை அவ்வாறே கட்சியளித்திருந்தது. இவற்றினையறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணதகரம் (ஜனா) அவர்களின் முயற்சியினால. இத்தூபி திங்கட் கிழமை (22) புணருத்தாருணம் செய்யப்பட்டு வைக்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உப்பினர் ச.வியாழேந்தின், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம் அப்பகுதி பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment