இலங்கை
CHARTERED SOCIETY OF PHYSIOTHERAPY அமைப்பின் வழிகாட்டலில் carmelian 05 foundation
யின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள உலக இயன்மருத்துவ
தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில்
பெரிய அளவிலான இலவச இயன்மருத்துவ சேவை முகாம் தரமான பல்துறை சார் நிபுணத்துவம் வாய்ந்த
இயன்மருத்துவர்களால் ஞாயிற்றுக்கிழமை (20) காலை 8 மணி முதல் நடைபெறுகின்றது.
இவ்
இலவச இயன்மருத்துவ சேவை வறுமையான கஷ்டப்பட்ட மக்கள் பயனடையும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ் இயன் மருத்துவ சேவை மூலம் எலும்பு, தசை, நரம்பு, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை
உடையவர்கள் சிகிச்சைகளையும் இயன்மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன்
போது பக்கவாதம் இடுப்பு வலி, தோள் மூட்டு இறுக்கம், முழங்கால் மூட்டு வீக்கம் மற்றும்
முள்ளந்தண்டு சம்மந்தமான பிரச்சினை , ஆதரைற்றிஸ் , குதிக்கால் வலி, குழந்தைகளில் ஏற்படும்
மூளை முடக்குவாதம், விளையாட்டு உபாதைகள் , பெண் நோயியல் இயன்மருத்துவம் , குழந்தைநல
இயன்மருத்துவம் ,சத்திர சியிச்சைக்குப் பின்னரான இயன்மருத்துவம் போன்ற பல பிரிவுகளில்
சிகிச்சையளிக்கப்படவுள்ள தாக
carmelian 05 foundation அமைப்பின் தலைவர் நடராசா கதீசன் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment