மட்டக்களப்பு நகர பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு பிரதான வீதியில் புதன்கிழமை 09.08.2017 இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன் அதை செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலையிறவு - வவுணதீவு பிரதான வீதியூடாக வவுணதீவு பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த முச்சக்கரவண்டி விமானப்படை வீதி வளைவில் வேகமாக திரும்புகையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் சென்றவர்களால் முச்சக்கரவண்டிச் சாரதி மீட்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இவ் விபத்து தொடர்பில் சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment