20 Aug 2017

யுத்தத்திற்குப் பின்னர் கடந்த அரசு கிழக்கை அபிவிருத்தி செய்யவில்லை பிரதமர்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 55 கோடி  ரூபாய் பெறுமதியான  அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் முதல் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை 20.08.2017 ஏறாவூர் நகரத்திற்கு வருகை தந்த அவர் சுமார் 120 மில்லியன் ரூபா செலவில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் நகர சபைக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்

இங்கு தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளை செய்துகாட்டிய  மாணவர்களுக்கு நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நாட்டின் தேசிய ஒற்றுமையை இது வெளிப்படுத்துகிறது.

இன ஐக்கியத்தை ஆரம்பபப் பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்க வேண்டும் என அமைச்சர் றவுப் ஹக்கீம் வலியுறுத்தி வருகின்றார். இதனையே நான் ஆமோதிக்கின்றேன்.

யுத்தம் நிறைவடைந்தாலும் கூட தேசிய இணக்கப்பாடு என்பது இன்னமும் இந்த நாட்டுக்குக் கிடைக்கவில்லை.

இப்பொழுது சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நல்லிணக்க அரசை ஆக்கியுள்ளோம்.

நாம் இப்பொழுது இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை ஒழிப்பதற்காகச் செயற்படுகின்றோம்.
முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதில் காட்டும் அக்கறையை நான் பாராட்டுகின்றேன்.

இந்த மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள். அமைச்சர்களும் மூவினங்களிலும் உள்ளார்கள்.

இனவாதிகள் இதனைக் குழப்புவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்கள்.
பட்டதாரி நியமனங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக 1700 பட்டதாரிகளை நியமிக்க அனுமதி வழங்கியதன் அடிப்படையில் இப்பொழுது நியமனங்கள் இடம்பெறுகின்றன.
கிழக்கு வடக்கு தெற்கு என்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
நான் எனது அமைச்சினூடாக 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உதவியாளர்களாக நியமனம் செய்வதற்கு ஒழுங்கு செய்துள்ளேன்.
இவர்கள் பயிற்சியின் பின்னர் பல்வேறுபட்ட கருமங்களில் பணிக்கமர்த்தப்படவுள்ளார்கள்.

நாங்கள் அரசைப் பாரமெடுக்கும்போது தாங்க முடியாதளவு கடன் சுமை இருந்தது. அதிக வட்டியைச் செலுத்த வேண்டியுள்ளது.

அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி ஆட்சியை முன்னராகவே கலைத்தார்.
இப்பொழுது தேசிய வருமானம் முன்னேற்றம் கண்டு வருகின்றது.
யுத்தத்திற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் எந்த வளர்ச்சியும் இருக்கவில்லை.
இலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்ற நாம் திட்டடங்களை வகுத்துள்ளோம்.

திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்.
கடற்படை, மீன்பிடி பொருளாதார, வருமானம், சுற்றுலாத்துறைக்கு திருமலை துறைமுக அபிவிருத்தி உதவும்.

இந்தியாவும் ஜப்பானும் இந்த விடயத்திலே உதவவுள்ளன.
கிழக்கு மாகாண அபிவிருத்தியிலே மாகாண அரசோடு சேர்ந்து மத்திய அரசும் உதவுகிறது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி விரிவுபடுத்தப்படும். விமானத் தளமும் அபிவிருத்தி செய்யப்படும் இதன் மூலம் பல தொழில்வாய்ப்புக்கள் கிட்டும்.
விவசாயம், பண்ணை அபிவிருத்தி உட்கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படும்.

இந்த நிகழ்வுகளில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி  மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, உட்பட இன்னும் பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.











SHARE

Author: verified_user

0 Comments: