மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 55 கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் முதல் நிகழ்வாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கான மூன்று மாடி கட்டிடத் தொகுதி மற்றும் வைத்தியர்களின் தங்குமிட கட்டடித் தொகுதிக்கும், ஏறாவூர் வாவிக்கரை சுற்றுலா பொழுதுபோக்கு விற்பனை மற்றும் தகவல் மையத்திற்கான அடிக்கல்லும் அமைச்சர்களால் நாட்டி வைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (20) கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் ஏறாவூர் நகரத்திற்கு வருகை தந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உட்பட்ட குழுவினர் இந்த அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
ஏறாவூரின் வாவிக்கரை பூங்காவை அண்மித்த பகுதியில் அமையப்பெறவுள்ள சுற்றுலா பொழுதுபோக்கு விற்பனை மற்றும் தகவல் மையம் சுமார் 100 மில்லியன் ரூபா செலவிலும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கான மூன்று மாடி கட்டிடத் தொகுதி மற்றும் வைத்தியர்களின் தங்குமிட கட்டடித் தொகுதி என்பன 158 மில்லியன் ரூபாய் செலவிலும் அமையப் பெறவுள்ளன.
0 Comments:
Post a Comment