19 Aug 2017

அணைக்கட்டு புனரமைப்பு

SHARE
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை விவசாயக் கண்டத்தின் விக்டர் அணைக்கட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக கமநலசேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தெரிவித்தார்.


முள்ளிப்பொத்தானைக் கண்ட விவசாயிகளால் பல வருடங்களாக விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மேற்படி அணைக்கட்டினை புனரமைப்புச் செய்வதற்காக மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3.5 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

அதற்கமைவாக  ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்  கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கத்தினால் வெள்ளிக்கிழமை 18.08.2017 ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த அணைக்கட்டு புனரமைப்புச் செய்யப்படுவதன் மூலம் 400 ஏக்கர் நீர்ப்பாய்ச்சல் செய்ய முடியும் என அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: