பெற்றோரை இழந்த ஏழை மாணவர்கள் இடையூறின்றி தங்களது கல்வியை தொடர்வதற்கு மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் அஹிம்சா எனும், சமூக நிறுவனம் பல்வேறு வழிகளில் அம்மாணவர்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றது.
கல்வி மேம்பாட்டுக்காக ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் தனது திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள காயான்குடா பாடசாலையில் ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் தளவாயைச் சேர்ந்த ஏழை மாணவி சீத்தாரமணன் சர்மி என்ற மாணவிக்கு செவ்வாய்க் கிழமை (01) அஹிம்சா சமூக நிறுவனத்தினால் துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி உதவியுள்ளது.
துவிச்சக்கர வண்டியை அஹிம்சாவின் அமைப்பின் உபதலைவரும் பாடசாலை அதிபருமான த.ராஜ்மோகன் மற்றும் உபதலைவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் சி.வி. விஸ்வலிங்கம் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் அஹிம்சாவின் தலைவர் வி.விஜயராஜா, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் அஹிம்சாவின் ஆலோசகருமான த.வசந்தராஜா மற்றும் தளவாய் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர். எஸ். நவச்செல்வன் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்
0 Comments:
Post a Comment