மட் சிவானந்தாதேசியபாடசாலைக்கும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரிக்கும் இடையில்) மட் சிவானந்தாமைதானத்தில் நடைபெற்ற “கிழக்கின் சமர்”எனவர்ணிக்கப்படும் கால்பந்தாட்டுபோட்டியில் 3 இற்கு 0 என்றஅடிப்படையில் மட் சிவானந்தாதேசியபாடசாலைவெற்றியீட்டி 2017ம் ஆண்டிற்கானசம்பியன் கிண்ணத்தினைவென்றது.
2015ம் ஆண்டுதொடக்கம் இவ்விருபாடசாலைகளுக்கிடையிலும் நடைபெற்றுவரும் இக்கால்பந்தாட்டுசம்பியன் போட்டியில் முதலாவதுகிண்ணத்தினை திருஅக்கரைப்பற்று இராமகிருஸ்ணாகல்லூரியும் அடுத்தடுத்த இரண்டுகிண்ணங்களையும் மட் சிவானந்தாதேசியபாடசாலையிலும் கைப்பற்றி இருக்கின்றன.
மட் சிவானந்தாதேசியபாடசாலையின் அதிபர் திரு எஸ் தயாபரன் தலமையில் நடைபெற்ற இக் கால்பந்தாட்டவிளையாட்டு நிகழ்விற்கு இலங்கைகால் பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அருண டீ சில்வாபிரதம அதிதியாகவும் மட் மாவட்டகால்பந்தாட்டசம்மேளனதலைவர் திருஎம் உதயகுமார் மற்றும் மட்டக்களப்புவலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர் சுகிர்தராஜன் ஆகியோர் கௌரவஅதிதிகளாகவும் மட் போதனாவைத்தியசாலையின் விளையாட்டுநிபுணர் வைத்தியர் ஏ.ஏ.எம் பாகிம் மற்றும் இலங்கைகால்பந்தாட்டசம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







0 Comments:
Post a Comment