10 Aug 2017

சிறுபோகச் செய்கை வெற்றியளித்ததையிட்டு உன்னிச்சை விவசாயிகளால் வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோகச் செய்கையிலீடுபட்ட விவசாயிகள்  எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்து நெற் செய்கை வெற்றியளித்ததையிட்டு இயற்கைக்கு நன்றி செலுத்தும் வழிபாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதாக உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.


எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11.08.2017 அன்று காலை 9 மணிக்கு உன்னிச்சைக் குளம் பிரதான நீரேந்துப் பகுதியில் இந்த வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மமட்டக்களப்பு மாவட்ட செயலாளர், விவசாய, கமநல மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள்  என அநேகமானோர் இந்த வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: