மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் செயற்றிட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் அப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பற்றிருக்கும் 30 யுவதிகளுக்கு யோகட் தயாரிக்கும் பயிற்றிநெறி வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.
தும்பங்கேணியில் அமைந்துள்ள அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் அப்பிரதேச கால்நடை சுகாதார வைத்திய அதிகாரி சி.ருசியந்தன் கலந்து கொண்டு யுவதிகளுக்குப் பயிற்சிகளை வழங்கினார்.
இப்பயிற்சி நெறியின்மூலம் வேலைவாய்ப்பற்றிருக்கும் இப்பகுதியைச் சேர்ந்த யுவதிகள் சுயதொழிலாக வீட்டிலிருந்தோ அல்லது குழுவாகச்சேந்தும், யோக்கட் தயாரிப்பில் ஈடுபட்டு தமது வாருமானத்தை ஈட்டிக்கொள்ள வசதியாக அமையும் என இதன்போது கலந்து கொண்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கே.ரவீந்தரன் தெரிவித்தார்.
இதன்போது மேற்படி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான ரி.பேரின்பராஜா, பி.பரமானந்தம், மற்றும் போரதீவுப்பற்று பிரதேச காநடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment