17 Aug 2017

ஏறாவூர் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவருக்கும் ஓகஸ்ட் 23 வரை விளக்கமறியல் நீடிப்பு

SHARE
ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவரும் மட்டக்களப்பு  நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 15, 2017) ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேக நபர்களை ஓகஸ்ட்  மாதம்  23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி 
 உத்தரவிட்டார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த செப்ரெம்பெர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வருகின்றனர்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29),  பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த  இஸ்மாயில் சப்ரின் (வயது 30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

SHARE

Author: verified_user

0 Comments: