கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக மற்றும் பேரவைக் கட்டிடத்தை ஆக்கிரமித்து தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடாத்தி வரும் மாணவர்களை அங்கிருந்த வெளியேறுமாறு கோரி நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக கவுன்ஸில் ஆகியவை விடுத்த உத்தரவையும் மீறி அப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் வந்தாறுமூலை வளாகத்தில் 15வது நாளாக செவ்வாய்க்கிழமையும் (22.08.2017) தொடர்ந்து இடம்பெற்றது.
முறையற்ற வகுப்புத்தடைகளை நீக்குமாறும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள 2ம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளைப் பெற்றுத் தருமாறும் அசிரத்தையாக உள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், மாணவர்கள் தமது பிரதான தேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தாம் பேரவைக்ளுநயெவந கட்டிடத்தினுள் தங்கியிருந்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதேவேளை, இரவு பகலாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் ஒரு சாரார் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு களிப்பூட்டி, கௌரவித்து, பரிசளித்து, பாராட்டி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment