22 Aug 2017

அமரர் நாகேந்திரன் வெற்றிக்கிண்ணத்தை துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக் கொண்டது.

SHARE
(க.விஜி)

துறைநீலாவணை மண்ணின் அபிவிருத்தி, கல்வியில் முன்னோடியாக திகழ்ந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் ஒருவராகவும்,துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் அமரர் வேலுப்பிள்ளை-நாகேந்திரன் திகழ்ந்தார். அமரர் நாகேந்திரன் அவர்களின் முப்பதெட்டாவது ஆண்டு தினத்தையும்,கழகத்தின் நாற்பத்தைந்தாவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை கடந்த இருவாரங்களாக நடாத்தியது. துறைநீலாவணைக் கிராமத்தின் கல்விச்சிந்தனையாளரும்,சமூக ஆர்வலருமான பொறியியலாளர்(அவுஸ்ரேலியா)அவருடைய முழுமையான அனுசரணையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த 32 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றி விளையாடியது.பதினொரு வீரர்களை கொண்ட அணியில் ஒன்பது ஒவர்களைக் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு கோட்டைக்கல்லாறு வளர்மதி விளையாட்டுக்கழகமும்,துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டது

இறுதி சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (20.8.2017) துறைநீலாவணை மத்திய விளையாட்டு மைதானத்தில் கழகத்தலைவர் சன்முகம் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,திருமதி நேசமணி நாகேந்திரன், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் விதாதவள நிலையத்தின் பொறுப்பதிகாரி நா.புள்ளநாயகம்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் .விநாயகமூர்த்தி,ஆசிரியர் .சர்வேஸ்வரன்,சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் தி.தாயாளன்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சோ.சந்திரகுமார், மா.பரசுராமன்,முன்னாள் தலைவர் கே.ஜெயநாதன்,திருமதி நிர்மலா ஜெயநாதன் ,மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டார்கள்

இறுதிப்போட்டிக்கு நாணயச்சுழற்ச்சியில் வெற்றிபெற்ற கோட்டைக்கல்லாறு வளர்மதி விளையாட்டுக்கழகம் துடுப்பெடுத்து ஆடியது. இதன்போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை கோட்டைக்கல்லாறு விளையாட்டுக்கழகம் குவித்தது.

துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகம்  வெற்றியடைவதற்கு 87 ஓட்டங்கள் தேவையென்று இலக்குவைத்து பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடியது. மெல்ல மெல்ல தட்டிக்கொண்டு நுணுக்கமாகவும், நிதானாமாகவும் விளையாடி 87 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிபெற்று அமரர் நாகேந்திரன் வெற்றிக்கிண்ணத்தை துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகம் தட்டிக்கொண்டது.

இதன்போது வெற்றி பெற்ற அணிகளுக்கு முதன்மைப்படுத்தி பதக்கம் அணிவிக்கப்பட்டு  முதலிடத்தைப் பெற்ற அணிக்கு 20,000 ரூபாவும், இரண்டாம் பெற்ற அணிக்கு10,000 ரூபா பெறுமதியான பணப்பரிசுகள்,மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்,சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த வீரர்,தொடராட்ட நாயகன்,போன்றோருக்கும்,அணிகளுக்கும்  வெற்றிக்கேடயங்கள்,அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.













SHARE

Author: verified_user

0 Comments: