மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான 9 வது தமிழியல் விருதுக்குரிய நூற்தேர்வுக்காக நூல்களை ஏற்றுக்கொள்ளும் விண்ணப்ப முடிவுத்திகதி ஆகஸ்ட் 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதன் புதன் கிழமை தெரிவித்தார்.
இது வரை தேர்வுக்காக நூல்களை அனுப்பி வைக்காத உலகின்
எப்பக்கத்திலும் வாழும் இலங்கை படைப்பாளர்கள்கள் 2015, 2016 ஆகிய
இரு ஆண்டுகளில் முதற்பதிவாக வெளிவந்த சகல துறை சார்
நூல்களின் மூன்று பிரதிகளை ஆகஸ்ட் 15ம் திகதிக்கு முன்னர் டாக்டர்
ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம், இல :1ஏ,
பயனியர் வீதி, மட்டக்களப்பு எனும் விலாசத்துக்கு அனுப்பி வைக்கலாம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment