19 Jul 2017

மட்.வின்சன்ற் மகளிர் உயர் தேசியப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்

SHARE
மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர் தேசியப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி காலை 930. மணிக்கு நடைபெறவுள்ளது.

பாடசாலையின் குறொவ்ற் மண்டபத்தில் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக செயலாளர் திருமதி பத்மஸ்ரீ இளங்கோ அறிவித்துள்ளார்.

இவ் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அத்துடன் முன்கூட்டியே வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களும் தங்களது வருகைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் வருகையனை உறுதிப் படுத்தியும் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது
அத்துடன், இப் பொதுக்கூட்டத்தில் கடந்த காலங்களிலும், கடந்த வருடத்திலும் மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டங்கள், மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதுன், புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்படவுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: