19 Jul 2017

மாணவர்களுக்கான வரலாறு இலகு வழிகாட்டி துணைப் பாடநூல் வெளியீடு

SHARE
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி விவேகானந்தா வித்தியாலய ஆசிரியர் இ.நாகேந்திரனால் தயாரிக்கப்பட்ட தரம் 6 மாணவர்களுக்கான வரலாறு  இலகு வழிகாட்டி துணைப் பாடநூலொன்று நேற்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மாணர்களின் வரலாற்றுப் பாட அடைவினை அதிகரிக்கும் நோக்கில் இந்த வரலாறு  இலகு வழிகாட்டி துணைப் பாடநூலானது தயாரிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் அதிபர் திரு கி.சிவலிங்கராஜா தலைமையில் பாடசாலை அபிவிருத்தி குழு ஒழுங்கமைப்பில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இந நூல் வெயியிட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி. ரவி, சிறப்பு அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.குணலிங்கம்,  மற்றும் அழைப்பு அதிதிகளாக கல்குடா  கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்  த. அகிலன், மற்றும் கல்மடு விவேகானந்தா வித்தியாலய அதிபர் சா.பாலச்சந்திரன், மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கல்வி முதுமாணி கற்கை நெறி ஆசிரிய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை  அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: