23 Jul 2017

பொருளாதார மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நட்டு வைப்பு.

SHARE
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (22) களுதாவளையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசன் பிரதம இதன்பொது அதிதியாக கலந்து கொண்டிருந்தார். 

மேலும் இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீரலி,  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யேகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பொருளாதார மத்திய நிலையம் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிருமாணிக்கப்படவுள்ளதோடு, 4 மாதங்களில் இதன் கடடுமானப் பணிகள் பூர்தி செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

























SHARE

Author: verified_user

0 Comments: