23 Jul 2017

தேசிய டெங்கு ஒழிப்புக்குச் சமாந்தரமாக கிராம தூய்மையாக்கல் பணி முன்னெடுப்பு

SHARE
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கிராமத்தில் முழுமையான டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி வியாழக்கிழமை 20.07.2017 மேற்கொள்ளப்பட்டதாக அப்பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்குச் சமாந்தரமாக இந்நிகழ்வு தங்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக வவுணதீவு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே. அருணா மற்றும் எஸ். ராஜசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.

முழுமையான கிராம தூய்மையாக்கும் பணியில் பொது இடங்கள், பாதை மருங்குகள், மைதானம், ஆலயங்கள், வாய்க்கால்கள் என்பன சிரமதானம் செய்யப்பட்டன.

இப்பொதுப் பணியில் ஈச்சந்தீவு முதியோர் சங்கம், கிராம மட்ட அமைப்புக்கள், மகளிர் சங்கம் ஆகியவற்றின் அங்கத்தவர்களும் கிராம மக்களும் சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களும் பங்கு பற்றினர்.

SHARE

Author: verified_user

0 Comments: