மட்டக்களப்பு ஒக்ஸ்போர்ட் பயிற்சி நிலையத்தினால் வெளிக்கள தலைமைத்துவப் பயிற்சியினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்கள்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18.07.2017) நடைபெற்றது.
பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் எம். ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா போன்றோர் கலந்துகொண்டு பயிற்சியினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.
இப்பயிற்சியில் சுமார் 30 பேர் கலந்துகொண்டனர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இப்பயிற்சி, கல்வெல்ல பிரதேசத்திலுள்ள பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஒக்ஸ்போர்ட் கல்லூரியின் கீழ் உள்ள ஒக்ஸ்போர்ட் பயிற்சி நிலையம் கடந்த சில வருடங்களாக இவ்வாறான தலைமைத்துவப் பயிற்சி, கருத்தரங்குகள், வேலைவாய்பு வழிகாட்டல்கள் போன்ற சேவைகளை மேற்கொண்டு வருவதாக அந்நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment