23 Jul 2017

தடைதாண்டல் போட்டியில் காத்தான்குடி மாணவன் தேசிய மட்டத்திற்குத் தெரிவு

SHARE
மாகாண மட்ட 16 வயதுக்குட்பட்ட 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியில்  காத்தான்குடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த எம்.ஆர்.எம். றஷான்  என்ற மாணவர் 3 ஆம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாகாண மட்டப்போட்டிகள் கடந்த 15ஆம் திகதியிலிருந்து மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்த மாணவனை உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எம். ஜவ்பர், ரீ. கிருபாகரன் ஆகியோர் பயிற்றுவித்து போட்டி நிகழ்ச்சிகளுக்கு ஊக்கப்படுத்தியிருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: