23 Jul 2017

மட்டக்களப்பில் அதிகவரட்சி போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினல் நாளாந்தம் 72000 லீற்றர் குடிநீர் வினியோகம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வெய்யிலுடன் கூடிய உஷ்னமான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாட்டத்திலுள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றிப்போயுள்ளதுடன் பெரிய குளங்களின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்து காணப்படுகின்றன. குளங்களில் நீர் வற்றியுள்ளமையினால் கால் நடைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, பெரியபோரதீவு, கோவில்போரதீவு, வெல்லாவெளி, போன்ற பல இடங்களில் காணப்படுகின்ற சிறு குளங்கள் அனைத்தும் முற்றாக வற்றியுள்ள இந்நிலையில் தும்பங்கேணிக்குளம், கடுக்காமுனைக்குளம், நவகிரிக்குளம் உள்ளிட்ட பெரிய குளங்களின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளன.

இப்பகுதியிலுள்ள சிறிய குளங்களைப் புணரமைப்புச் செய்வதோடு, துர்ந்துபோய்க் கிடக்கும், வாய்க்கால்களையும், புணரமைப்புச் செய்தால் ஓரளவேனும் கிணறுகளில் நீர் ஊற்றெடுக்கும் வாய்ப்புக்கள் உருவாகும், என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இந்நிலையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் வாரத்தின் 7 நாட்களும் வவுசர் மூலம் பொதுமக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்குமாக நாளாந்தம் 72000 லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஆதித்தன் வியாழக்கிழமை (20) தெரிவித்தார்.

வரட்சிநிலமை காரணமாக சிறுபோக வேளாண்மைச் செய்கையும்  வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், மாவட்டத்தின் வாரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபோக வேளாண்மை செய்கையின் சரியான விபரம் எமக்கு வந்து சேரவில்லை, ஆனாலும் வாகரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறுநீர்ப்பாசன வேளாண்மைச் செய்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன, சுமார் 2000 ஏக்கருக்கு மேலாக மாவட்டரீதியில் தற்போது வரைக்கும் பாதிக்கப்பட்டிருக்கலாம், என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்ட ஆளையாளர் என்.சிவலிங்கம் தெரிவித்தார். 

இதேவேளை நவகிரிக்குளத்தில் தற்போது 11 அடி நீர் மட்டம் உள்ளது. இக்குளத்திலிருந்து குடிநீருக்காக அவ்வப்போது திறந்து விடப்படுகின்றதாக இக்குளத்திற்குப் பெறுப்பான பொறியியலாளர் மு.பத்மதாஸன் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: