காத்தான்குடி நகர மத்தியில் வியாழக்கிழமை 20.07.2017 காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தரான வயோதிபர் காலுடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த எம். நூர்முஹம்மது (வயது 56) என்பவரே காலுடைந்த நிலையில் முன்னதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மட்டக்களப்பு கல்முனை வீதியில் காத்தான்குடி நகருக்கூடாக இந்த வயோதிபர் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்ருந்தபோது வேகமாகச் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரமும் நெல் மூடைகள் ஏற்றிய அதன் இழுவைப் பெட்டியும் இவர் மீது மோதியுள்ளது.
உழவு இயந்திர இழுவைப் பெட்டியின் கீழே அகப்பட்டு காலுடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
உழவு இயந்திரத்தைக் கைப்பற்றியதோடு சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment