(க.விஜி)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பாரியதொரு டெங்கு துப்பரவு வேலைகள் இன்று(19.7.2017) காலை 7.30 மணியளவில் மாணவர்கள் ஆசிரியர்களினால் மேற்கோள்ளப்பட்டது.அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்களின் ஒருங்கிணைந்த
முகாமைத்துவத்தின் பேரிலும்,ஆலோசனையிலும் இது நடைபெற்றது.பாடசாலைச் சுழல் வளாகத்தை பத்து பகுதிகளாக பிரித்து பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு துப்பரவு வேலைகள் நடைபெற்றது.இதனை ஆசிரியர்களான எஸ்.சீ.ஜெயக்குமார்,எஸ்.வரதராஜன்,ஜீ.கிசோர் மேற்பார்வை மூலம் சிரமதானம் நடைபெற்றது.
இதன்போது பொலீத்தின்,பிளாஸ்ரிக் பொருட்கள்,குப்பைகள் அகற்றப்பட்டு திண்ம கழிவகற்றல் முகாமைத்துவத்தின் கீழ் தரம்பிரிக்கப்பட்டு உரப்பையில் இடப்பட்டது.கடந்த பங்குனி மாதம் முதலாம் திகதி (3.1.2017) பாடசாலையில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.இருந்தும் இதுவரையும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை சுற்றாடல் பாதிக்காத வகையில் உணவு வழங்குவது நிறுத்தப்படவில்லை.எனவே பெற்றோர்கள் விழிப்படைந்து பொலீத்தின்,ரிசு,லஞ்சீற் போன்றவற்றை தவிர்த்த உணவுகளை வழங்குவது பாடசாலை சூழலுக்கு ஆரோக்கியமாக காணப்படும்.





0 Comments:
Post a Comment