புளொட் இயக்கத்தின் செயலதிபர் கே. உமாமகேஸ்வரனின் 28வது படுகொலை நினைவஞ்சலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 16.07.2017 இடம்பெற்றது.
புளொட் இயக்க அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில், அதன் நிர்வாகச் செயலாளர் எம். பத்மநாதன் தலைமையில் 28வது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் கே. உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சி முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.





0 Comments:
Post a Comment