2 May 2026

சுரவணையடியூற்றில் காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் மரணம்.

SHARE

சுரவணையடியூற்றில் காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் மரணம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், சனிக்கிழமை(02.05.2026) அதிகாலை வேளையில் காட்டு யானைத் தாக்குதலுக்கிலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவத்தில் சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய 4 பிள்ளைகளின் தயானந்தராசா வசந்தி என்பவரே உயிரிழந்துள்ளார். 

இன்றயதினம் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சுரவணையடியூற்று கிராமத்திற்குள் காட்டு யானை உட்புகுந்துள்ளது. இந்நிலையில் குறித்த குடும்பஸ்த்தாரின் வளவினுள் ஏதோ சத்தம் கேட்பதை அவதானித்த அப்பெண் வெளியில் வந்து பாரத்துள்ளார். இந்நிலையில் வளவினுள் நின்றுகொண்டிருந்த காட்டு யானை அப்பெண்ணைத் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் அவர்களுடைய உத்தரவுக்கமைய சனிக்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறப் பிரதேசங்களான, போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, உள்ளிட்ட பல பகுதிகளிலும் நீண்டகாலமாகவிருந்து இவ்வாறு காட்டு யானைகளின் ஊடுருவல்களும், தாக்குதல்களும், அட்டகாசங்களும், அதிகரித்தவண்ணமேயுள்ளன.







SHARE

Author: verified_user

0 Comments: