28 Apr 2026

மட்டக்களப்பில் நடைபெற்ற படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பில் நடைபெற்ற படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

படுகொலை செய்யப்பட்ட  சிரேஷ்ட ஊடகவியலாளர் “தராக்கி டி.சிவராமின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத தூபியில் இன்று செவ்வாய்கிழமை(28.04.2026) நடைபெற்றது. 

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் ஆகிய ஊடக அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம்.பாக்கியநாதன், சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம், ஊடக அமைப்புக்களின் உறுப்பினர்கள், என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது சிவராமின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம்.பாக்கியநாதன் அவர்களும், சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் அவர்களும் இணைந்து மலர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

பின்னர் சிவராமின் ஊடகப் பணிதொடர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களான செ.பேரின்பராசா, இரா.துரைரெத்தினம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வ.சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர்.

 






















SHARE

Author: verified_user

0 Comments: