30 Jun 2017

இலங்கையில் வளர்ச்சியடையாத மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது என்கிறார் மகிந்த

SHARE
இலங்கையில் கடல் மீன் வளர்ப்புத்திட்டம் முதன் முதலாக இங்குதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு தடவையில் 8 இலெட்சத்திற்கு அதிகமான கொடுவா மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். அத்துடன் கடல் வாழ் அனைத்து உயிரினங்களும் இத்திட்டத்தினூடாக வளர்த்து இப்பகுதி மக்கள் வளம் பெறலாம். அதசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்படும் இச்செயற்றிட்டதினூடாக இப்பகுதிவாழ் இளைஞர் யுவதிகளும் பயன் பெறலாம். இத்திட்டத்திலிருந்து வருடத்திற்கு 3000 இத்திற்கு அதிகமான மெற்றிக் தொண் மீனைப் பெறலாம் என எதிர் பார்க்கின்றோம்.


என கடற்றொழில் நீரில் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்  கீழ் 142 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் கடற்றொழில் நீரில் வள அபிவிருத்தி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினல் நிருமாணிக்கப்பட்ட செட்டை மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு தர்மபுரத்தில் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேலும் குறிப்பிடுகையில்….

இதுபோன்ற உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக விலை உள்ளது. இதனூடாக 4000 இத்திற்கு அதிகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது. இதனூடாக கிடைக்கப்பபெறும் தொழில்களும் அரசினால் பெற்றுக் கொடுக்கப்படும் தொழில்களிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கின்றேன். இத்திட்டத்திற்கு கொழும்பிலிருந்தோ அல்லது ஏனைய பிரதேசங்களிலிருந்தோ இளைஞர் யுவதிகளை நியமித்து வெற்றி பெறமுடியாது. மாறாக இந்த மாட்ட, மாகாண இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் nhகடுத்து இந்த தொழிற் சாலையை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணமாகும். இலங்கையில் வளர்ச்சியடையாத மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.  மட்டக்களப்பு மாவட்டத்தை விவசாயத்துறையில் மாத்திரமின்றி மீன்பிடித்துறையிலும் முன்னேற்ற முடியும் என நாங்கள் நம்புகின்றோம். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7500 ஏகர் நிலம் மீன்பிடித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இந்த நிலப்பதைப்புக்களை வைத்துக் கொண்டு தொழிற் சாலைகளை மேற்கொள்வோமாயின் 20000 இற்கு மேற்பட்டோருக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கலாம் அந்த இலக்டை அடைவதற்காக இந்த மாட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளின் உதவியை நான் எதிர் பார்க்கின்றேன். மக்களின் அதரவும் கிடைக்குமாயின் அவற்றை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்த முடியும். நாம் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் சூழலுக்குப் பொருத்தமானதும் மக்களுக்குப் பிரயோசனமானதுமாகும்.

கடந்த வருடம் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்கு 500 மில்லியன் ரூபாய நிதி மீனவர்களுக்காக ஒதுக்கிடு செய்யப்பட்டிருந்தது. அது மக்கள் மத்தியில் காணப்பட்ட எதிர்ப்பின் காரணமாக அது பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இத்திட்டம் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் போன்றோரால் முன்நெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டார்கள் அது முடியாமல் போய்விட்டது. இந்த திட்டம் தற்போது மன்னாரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த திட்டத்தினூடாக அடுத்த வருட ஆரம்பத்தில் 15000 தொழில் வாய்ப்புக்களை மன்னார் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முயற்சித்துள்ளோம். இதனூடாக அதிகளவு சர்வதேச நாணயங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என நம்பகின்றோம்.  வடக்கில் என்றாலும், கிழக்கில் என்றாலும் எந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அது மக்க்ள பயன் பெறக் கூடிய அளவிற்குத்தான் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனூடாக தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து வறுமையினைப்போக்கி வெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு வருவதுதான் இதன்நோக்கமாகவுள்ளன. 

இந்நாட்டில் விவசாயத்துறை மற்றுமு; ஏனைய துறைகளைவிட மீன்பிடிது;துறையை முன்நேற்றலாம் என எமக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டைகச் சுற்றி கடல் உள்ளன 116 களப்புக்கள் உள்ளன. ஆனாலும் சில மீன்களை வெளிநாட்டிலிருந்து .றக்குமதி செய்கின்றோம். 2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களைக்குறைதது சர்வதேச சந்தைக்கு இங்கிருந்து மீன்களை ஏற்றுமதி செய்யவேண்டும்.

சர்வதேச வருமானத்தின் அடிப்படையில் 12 வது இடத்தில் தான் மீனவப்பிரிவு உள்ளது. 2020 ஆம் ஆண்டில் சர்வதேச வருமானத்தை இலங்கைக்கு ஈட்டிக்கொடுக்கும் 3 வது துறையாக மீனவத்துறை காணப்படும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மீன்ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி வலுகை கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே எதிர் காலத்தில் ஒரு லெட்டசத்திற்கு அதிகமான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம். 

சர்வதேச மீனவர்கள் நம் நாட்டுக் கடலில் மீன் பிடித்தலைத் தடுத்தல், தடை செய்யப்பட்ட மீனவ உபகரங்கள் தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் ஒன்றும் இயற்றப்படவுள்ளன. சர்வதேச மீனவர்கள் நமது கலில் மீன்பிடித்தால் அவர்களுக்கு 10 மில்லியன் அபராதமும், அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதும் என அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. என அவர் மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: