30 Jun 2017

தொழுகையை முடிக்கும் வரை நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

SHARE
(ஏ.ஹுஸைன்) 

ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஏறாவூர் நகரத்தில் உள்ள ஜாமிஉல் அக்பர் பள்ளிவாசலில் தொழுகையை முடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டுச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் 10 நிமிட இடைவெளியில் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


ஏறாவூர் பிரதான வீதியைச் சேர்ந்த அச்சி முஹம்மது முஹம்மது றாபி (வயது 30) என்பவரின் பல்ஸர் ரக பிபிஎச் (BBH 7753 எனும் கறுப்பு நிற மோட்டார் சைக்கிளே மிக சூட்சுமமாகத் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி மோட்டார் சைக்கிளைப் பறிகொடுத்தவர் பொலிஸ் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கும்போது@ புதன்கிழமை (28.06.2017) மாலை 6.30 மணியளவில் கருக்கல் நேரத் (மஹ்ரிப்) தொழுகையை முடித்துக் கொள்வதற்காக தான் பள்ளிவாசல் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து பூட்டிவிட்டு தொழுகைக்குச் சென்றதாகவும் சுமார் 10, 15 நிமிடங்கள் கழித்து பள்ளிவாசலை விட்டு வெளியேறி வந்து மோட்டார் சைக்கிள் இருந்த இடத்தைப் பார்த்தபோது அது காணாமல் போயிருந்ததாகவும் தெரிவித்தார்.

இது பற்றி குறிப்பிட்ட காட்டுப்பள்ளி வீதி மற்றும் ஏறாவூர் நகர பிரதான வீதியுட்பட வேறு வீதிகளிலுள்ள காணொளிக் கமெராக்களின் உதவி கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: