(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினத்தை (மே-31) முன்னிட்டு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவியரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடிவிற்பனை செயற்திட்டத்தினை பிரதேச மட்டத்திலான சங்கங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு (31.05.2017) மருதமுனை சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே திணைக்கள முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் இவ்வாறு தெரிவித்தாா். தொடா்ந்து உரையாற்றும் போது,
”தீய பழக்கங்களை ஒழித்து நிரந்தர மகிழ்ச்சியை அனுபவிப்போம்”, ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய கொடி விற்பனை செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரைக்குமாக ஒரு மாதகாலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன்முலம் சேகரிக்கப்படும் நிதி இங்கு வருகை தந்திருக்கின்ற சங்கங்கள் அதாவது உங்கள் மூலமாக உங்கள் அபிவிருத்திக்கே செலவு செய்யப்படவுள்ளது. இதற்குரிய திட்டங்களை நீங்களே தயாரித்துத் தரவேண்டும்.
கிராமங்களில் சாதரண குடும்ங்களில் குறிப்பாக மிகக்குறைந்த வருமானத்தை ஈட்டுகின்றவா்கள் புகைத்தல், மதுபானம் பேன்ற பாவனைக்காக அதிகளவான நிதியினை செலவு செய்கின்றனர். இதனை இல்லாமல் செய்து தனிமனித சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். எனவே இங்கு புகைத்தலில் ஈடுபடுகின்றவா்களை வைத்துக் கொண்டு செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியாது என்றாா்.இந்த நிகழ்வில் சமூர்த்தி உதவி முகாமையாளா்கள், சமூர்த்தி உத்தியோகத்தா்கள், பிரதேச மட்டத்திலான சங்க உறுப்பினா்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்.
0 Comments:
Post a Comment