சித்திரை வருடப்பிறப்பில் திடீர் பரிசோனைi
மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் 57.5 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி கண்டு பிடிப்பு.
களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில் 57.5 கிலோ கிராம் ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை வருடப்பிறப்பான இன்றயத்தினம் செவ்வாய்கிழமை(14.04.2026) பொதுச் சுகாதார பரிசோதகரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உரிய வியாபாரிக்கு எதிராக் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு
உட்பட்ட இறைசிக் கடைகள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரினால் விசேட உணவு
பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது கோழி இறைச்சி கடையொன்றினுள் 57.5 கிலோ கிராம் ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இவ்வாறாக பாவனைக்கு உதவாத ஏற்கனவே இறந்த கோழி இறைச்சியை குளிர்சாதனப்பட்டியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பிரிவுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் த.கஜானனினால்; விற்பனையாளருக்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன் விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளர்.
குறித்த வியாபாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி அனைத்தும் உடன் பொதுச் சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டது.




0 Comments:
Post a Comment