ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் பல்தின படகுகளுக்கு ட்ரான்ஸ்பொண்டர் TRANSPONDERS FOR MONITORING DEEP SEA FISHING VESSELSஎனும் புதிய வகைக் கருவி கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் பொருத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ. பரீட் தெரிவித்தார்.
இதன் மூலம் மீன்பிடிப் படகுகள் கடலில் மீன்களை தேடிப் பார்க்கக் கூடியதாக இருப்பதுடன், இந்தப் படகுகளில் பயணம் செய்யும் மீனவர்களுக்கு யாதேனும் ஆபத்துக்கள் நேரிடின், அவர்களை இதிலிருந்து விடுவிப்பதற்கு இந்த உபகரணத்தி;ன் உதவியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பது இந்த உபகரணத்தின் மூலம் கிடைக்கக் கூடிய அனுகூலமாகும் என்றும் அவர் கூறினார்.
அத்தோடு கடலுக்குள் செல்லுதல் மற்றும் கரையேறுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கண்காணிப்பில் இருப்பதுடனான இந்த வசதி மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையிலுள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 இற்கு மேற்பட்ட ஆழ்கடல் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன.
இந்த மீன்பிடிப் படகுகளுக்கும் இந்த நவீன உபகரண வசதியைப் பெற்றுத் தர கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
முக்கியமாக சர்வதேச கடல் சட்டத்துக்கு அமைய பல்தின மீன்பிடிப் படகுகளுக்கு இந்த நவீன உபகரண வசதி வழங்கப்படும்.
இதற்கமைய அரசினால் பாரிய தொகை செலவிட்டு இந்த உபகரணம் மீன்பிடிப் படகுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
சமுத்திர நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட பல்தின படகுகளின் நடவடிக்கை தரையிறக்கல் தொடக்கம் பரிசீலனை செய்யும் புதிய கருவி பொருத்தும் வசதிகள் வேலைத் திட்டம் கடந்த 2017.04.26 அன்று திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர ஆரம்பித்து வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment